விழுப்புரம் மாவட்ட காவல்துறையின்பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் :

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. மதிவாணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில்,

19.11.2026 இன்று காலை 10.00 மணியளவில் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார் மனுக்கள் (25) பெறப்பட்டன.

பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுத்து விரைந்து தீர்வு காணுமாறு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணகுமார், விக்கிரவாண்டி பொறுப்பு விழுப்புரம், திருவெண்ணைய்நல்லூர் மண்டல துணை வட்டாட்சியர் பிரபேந்திரன், திருவெண்ணைய்நல்லூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவல் ஆய்வாளர் அழகிரி உடனிருந்தனர்.