தமிழகத்தில் 75% குடிநீர் தொட்டிகள் பராமரிப்பின்றி – பாசி படிந்த நீரால் மக்கள் உயிருக்கு ஆபத்தா…?

குடிநீர் தொட்டி பராமரிப்பின்மை – டெங்கு, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம்,

விழுப்புரம்,நவ.16: தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் தரைமட்ட தொட்டிகளில் சுமார் 75 சதவீதம் முறையாக பராமரிக்கப்படவில்லை என பொது மக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுவருகிறது,

பொதுமக்கள் சிலர் கூறியதாவது,

  1. பல தொட்டிகளின் உள்ளே பச்சை பாசி, வழுவழுப்பான படலம் படிந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர், இது நீண்ட நாள் சுத்தம் செய்யாததன் அடையாளம்.
  2. தொட்டி மேல் மூடி இல்லாமல், பறவை எச்சம், தூசு, இலை தழைகள் விழுவதாகவும், இதனால் கொசு உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
  3. பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரை முறையாக கலக்காமல், வெறும் தண்ணீரை மட்டும் நேரடியாக விநியோகம் செய்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

4).தமிழகத்தின் விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்ட ஊராட்சிகளில் இதே நிலை உள்ளதாக கூறப்படுகிறது,

5).மக்கள் நலன் பாதிப்பு – மருத்துவ ரீதியாக தொடரும் ஆபத்துகள்,

சுத்தம் செய்யப்படாத தொட்டி நீரை குடிப்பதால்,

குழந்தைகளுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி,

பெரியவர்களுக்கு டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலரா,

மூடி இல்லாத தொட்டியால், டெங்கு கொசு உற்பத்தி, மலேரியா
என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது,

இது குறிப்பாக மழைக்காலத்தில் அதிக ஆபத்தாகும்,

6).Tamil Nadu Panchayats Act 1994 – Sec 110 & 111, ஊராட்சிக்கு குடிநீர் வழங்குவது விருப்ப கடமை அல்ல, கட்டாய கடமை. பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும்.

7).Water (Prevention and Control of Pollution) Act 1974 – Sec 24, குடிநீர் ஆதாரத்தை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றம்.

8).Environment Protection Act 1986 & BIS 10500:2012, குடிநீரின் தரம் இந்திய தர நிர்ணயமான IS 10500:2012 படி இருக்க வேண்டும். பாசி படிந்த நீர் இந்த தரத்தில் வராது.

9).அரசாணை GO Ms No. 52 – ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை, இதன் படி – குடிநீர் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு கிருமி நீக்கம் செய்ய வேண்டும், 3 மாதத்திற்கு ஒருமுறை முழுமையாக காலி செய்து உள்ளே இறங்கி சுத்தம் செய்ய வேண்டும் என தெளிவாக உள்ளது.

10).இந்திய அரசியலமைப்பு Act 21, பாதுகாப்பான குடிநீர் என்பது ஒவ்வொரு குடிமகனின் வாழும் உரிமையின் ஒரு பகுதி என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது,

எனவே,தமிழக அரசு, ஊரக வளர்ச்சித் துறை உடனடியாக அனைத்து ஊராட்சிகளுக்கும் புதிய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்,

ஒவ்வொரு தொட்டியிலும் “கடைசியாக சுத்தம் செய்த நாள்” என்ற பலகை வைக்க வேண்டும்,

மாதம் ஒருமுறை PHED – குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் தர பரிசோதனை செய்ய வேண்டும்,

ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் கையெழுத்துடன் தொட்டி சுத்த புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பும் முறை கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.