தனியார் நிறுவனத்திற்காக சட்ட மீறல்கள்

விழுப்புரம், கடலூர் மாவட்ட, புதுவை மாநில விவசாயிகள் நலன் காக்கப்படுமா…?

சமூக ஆர்வலர் அய்யனார் கேள்வி,

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், கோண்டூர் கிராமத்தில் 500 ஏக்கர் விவசாய நிலத்தில்,தென்னை, கரும்பு, நெல் சவுக்கு போன்றவை மிக செழிப்பாக வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது,

இதனைச் சார்ந்து 300 குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெற்று வாழ்ந்து வருகின்றனர்,

உயர் மின் கோபுரம் அமைக்கப்படும் எல்லை விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம், புதுவை மாநிலத்தின் நிலப் பகுதிகளை கொண்டதாகும்,

இந்த நிலத்தில், ஊடாக தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாக உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது,

அவ்வாறு அமைத்தால் விவசாயம் அழியும் ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது,

மேலும், இதனால் நிலத்தின் மதிப்பு குறைவதுடன், கிணற்று நீர், சுற்றுச்சூழல் பாதிக்கும்,

ஆகையால் விவசாய நிலத்தின் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டாம் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்,

விழுப்புரம் மாவட்ட, வட்ட எல்லைக்குட்பட்ட கோண்டூர் முதன்மையாக பாதிக்கும் நிலை உள்ளது,
Patta, Chitta, FMB, Gift Deed ஆகியவற்றினை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், விழுப்புரம் வட்டாட்சியர், விழுப்புரம் கோட்டாட்சியர், விழுப்புரம் ஆட்சியர் ஆகியோர் உடனடியாக தனிக்கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்,

இரண்டாவதாக கடலூர் மாவட்ட எல்லை வழியாக உயர் மின் கோபுரம் செல்வதால் அங்குள்ள விவசாய நிலங்கள், ஏரி, ஓடை பாதிக்கும் நிலை உள்ளது,

இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர், கடலூர் SE TANGEDCO, DEE TNPCB தனி கவனத்துடன் விசாரிக்க வேண்டும்,

மூன்றாவதாக இந்த மின்சாரம் புதுச்சேரி மாநில மின் தேவைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது,

புதுச்சேரி மாநில மின் துறை ஒப்புதல் இல்லாமல், தமிழ்நாட்டு விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க முடியாது,

சட்டங்களின் விரிவான அலசல் :

1). இந்திய தந்தி சட்டம் 1885 பிரிவு 10 & 16(1) : உயர் மின் கோபுரம் அமைக்கும் முன் நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தால், மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு செய்து ஆணையிட வேண்டும்,
மாவட்ட ஆட்சியர் அனுமதி / ஆணை பெறாமல் எவ்வித பணியும் மேற்கொள்ளக்கூடாது,

2). மின்சார சட்டம் 2003 பிரிவு 67(2) & 164 : உயர் கோபுரத்தின் மூலம் மின் வழித்தடம் அமைக்கும் போது விவசாய நிலத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும், நில உரிமையாளர் ஏற்புடைய இழப்பீடு கொடுக்க வேண்டும், 164-ன் படி அதிகாரம் இருந்தாலும் நில உரிமை பறிக்க முடியாது,

3). CEA வழிகாட்டுதல் 2022 : மாற்று வழி ஆய்வு – Alternative Route Survey கட்டாயம். மூன்று மாற்று வழிகளை ஒப்பிட்டு குறைந்த பாதிப்பு உள்ள வழியை தேர்வு செய்ய வேண்டும், மேலும் அதற்கான திட்ட அறிக்கையினை வெளியிட வேண்டும்,

4). தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட நீர் நிலைகள் சட்டம் 2007 பிரிவு 7 & 11 : ஏரி, குளம், ஓடையில் ஓயர் மின் கோபுரங்கள் அமைக்க கூடாது, பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அனுமதியின்றி நீர் நிலையில் கட்டுமானம் செய்யக் கூடாது,

5). Power Grid vs Century Textiles 2017 உச்ச நீதிமன்ற தீர்ப்பு : விவசாயி அனுமதி இல்லாமல் நிலத்தை பயன்படுத்த கூடாது, இழப்பீடு முழுமையாக அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,

6). BNS 2023 பிரிவு 278 & நீர் சட்டம் 1974 பிரிவு 24/25 : நீரை மாசுப் படுத்துவது குற்றம், ஆழ்துளை கிணற்றில் கழிவு நீர் விடுவது குற்றம், TNPCB நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

7). தமிழக நில பயன்பாட்டு கொள்கை 2023 அரசாணை 113 : விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு மாற்றக் கூடாது, விவசாய நில பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்க வேண்டும்,

8). சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 பிரிவு 3 : சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு செய்யாமல் திட்டம் செயல்படுத்தக் கூடாது

9). ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 110 : கிராம சபை தீர்மானம் இல்லாமல் கிராமத்தில் பெரிய திட்டங்களை செயல்படுத்தக்கூடாது,

10). RTI சட்டம் 2005 பிரிவு 6 & 7 : பொதுமக்கள் கேட்கும் ஆவணத்தை 30 நாளில் வழங்க வேண்டும், மறைக்க கூடாது,

TVS மிட்டா மண்டகப்பட்டு துணை மின் நிலையம் – 6 ஆவணம் விரிவான அலசல் :

TVS என்று கூறப்படும் துணை மின் நிலையம் அமைந்துள்ள இடம் தனியாருடையது என்று கூறப்படுகிறது, அரசு துணை மின் நிலையம் தனியார் இடத்தில் இருந்தால் அந்த இடம் அரசுக்கு தானமாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அவ்வாறு தானமாக வழங்கப்படவில்லை, அவ்வாறு உரிமைப் பெறாமல், பயன்படுத்தினால், அது சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்ற கேள்வி எழும், அதனால் கீழ்கண்ட ஆறு ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்,

1). Patta, Chitta, FMB Sketch – யார் பெயரில் உள்ளது,

2). Gift Deed / தான பத்திரம் – பதிவு எண், நாள் சார்பதிவாளர் அலுவலகம்,

3). புல எண், நிலப் பரப்பளவு,

4). கோட்டாட்சியர், விழுப்புரம் Land Alienation Order – தானம் ஏற்பு ஆணை,

5). வட்டாட்சியர் விழுப்புரம், விக்கிரவாண்டி தடையில்லா/ மறுப்பில்லா(NOC) சான்றிதழ் இல்லை,

6). SE,TANGEDCO விழுப்புரம் தொழில்நுட்ப ஆணை (Technical Sanction) இல்லை,

TVS தொழிற்சாலை TNPCB ஆழ்துளை புகார் விரிவான அலசல் :

CTE CTO Form V Hazardous Waste Authorization நகல் DEE TNPCB விழுப்புரம் / கடலூர் வெளியிட வேண்டும், ஆழ்துளை கிணற்றில் கழிவு நீர் விடுவதாக புகார் உள்ளது, SGWA இயக்குநர் சென்னை – உதவி இயக்குநர், விழுப்புரம் வழங்கிய ஆழ்துளை அனுமதி நகல்,

பொதுப்பணித்துறை அனுமதி நகல்,

குடிநீர் மாதிரி ஆய்வு முடிவு வெளியிட வேண்டும்,

துறை, பதவி விவரம் :
வருவாய்த் துறை VAO,RI – கோண்டூர், கண்டமங்கலம் – வட்டாட்சியர், விழுப்புரம் – DRO விழுப்புரம், கடலூர், புதுச்சேரி – மாவட்ட ஆட்சியர்,
TANGEDCO : SE விழுப்புரம் / கடலூர் / புதுச்சேரி, – EE AEE AE
TNPCB: DEE விழுப்புரம் / கடலூர் – AEE
PWD WRO : SE – EE ஏரி பிரிவு – AEE
SGWA : இயக்குநர் சென்னை – உதவி இயக்குநர் விழுப்புரம்
ஊரகம் : BDO கண்டமங்கலம் – ஊராட்சித் தலைவர், கோண்டூர்
முதல்வர் தனிப்பிரிவு : மனு 5647
தொழில் : GM DIC விழுப்புரம் / கடலூர் ஆகியோர் முழு பொறுப்பு அலுவலர்களாவர்,

பொது நலக் கோரிக்கை :
1). மனு 5647 நிலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட, புதுவை மாநில இணையத் தளத்தில் இதன் முழு விவரங்களையும் வெளிப்படையாக பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்,

2). 6 ஆவணம் + TNPCB CTO + ஆழ்துளை அனுமதி RTI -க்கான பதில் அளிக்க வேண்டும்,

3). கிராம சபை தீர்மானம் இல்லாமல் உயர் மின் கோபுரம் அமைக்க கூடாது,

TNPCB குடிநீர் தரத்தினை ஆய்வு செய்து வெளியிட வேண்டும்,

4). மூன்று பகுதிகளின் மின் தேவை – தனியார் ஒப்பந்தாரர் பெயர் – PWD ஏரி அனுமதி வெளியிட வேண்டும்,

5). மாற்று வழி ஆய்வு முடிவு தெரியும் வரை செய்யும் வரை திட்டம் நிறுத்த வேண்டும்,

அனைத்து வகையிலும் விவசாயத்திற்கு மிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும்.