அடுத்த தலைமுறைக்கான முன்மாதிரி திட்டம்,
கண்டாச்சிபுரம்,நவ.16:வடகரைதாழனூர் கிராமத்தில் இளைஞர்கள் தானாக முன்வந்து ஒரு முன்மாதிரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்,
மண்ணுக்காக விதைக்கிற விதை என்னைக்கும் அழியாது என்ற உயர்ந்த நோக்கத்துடன்
1.ஏரிக்கரை,
2.சுடுகாட்டு பாதை,
3.வெள்ளா குளக்கரை,
4.வடகாட்டு பாதை
ஆகிய நான்கு இடங்களிலும் சுமார் 800 பனை விதைகளை இளைஞர்கள் குழுவாக சேர்ந்து, சொந்த செலவில், பைக்கில் சென்று விதைகளை சேகரித்து, 11.11.2026 அன்று குழி தோண்டி நடவு செய்துள்ளனர்.
இப்பணியில் நேதாஜி முன்னிலையில்
மோனிஷ் தமிழரசன், பூவரசன், தமிழ்மணி, வினோத், அருண்குமார், ரஞ்சித், ஜனார்த்தனன், பிரசாந்த், சந்துரு, ராமன், லக்ஷ்மணன், ஜயப்பன்,பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்,
பெருமளவு பனை விதை சேகரித்தவர்களில் நாம் தமிழர் கட்சி, திருக்கோவிலூர் சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலாளர்
புதுப்பாளையம் அஜித் குமார் பாராட்டுக்குரியவர் ஆவார்,
இந்த பொதுநலப் பணியினை 12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்பதை குறிப்பிடத்தக்கது,
தமிழ்நாடு அரசின் மாநில மரமான பனை மரம், மண் அரிப்பை தடுக்கும், நிலத்தடி நீரை காக்கும், புயலை தடுக்கும் இயற்கை அரணாகும்,இதை உணர்ந்து செயல்பட்ட இளைஞர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.









Leave a Reply